ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜாகிர் உசேன் தனது நண்பர்களுடன் இணைந்து சின்ன சங்கரன்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்கள் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் ஜாகீர் உசேன் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் இறங்கி ஜாகிர் உசேனின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் ஜாகிர் உசேனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.