முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் அனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு நிறுவனங்களுக்கு இயக்குனராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் அம்பானி பொறுப்பேற்க உள்ளார். ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி என்று இரண்டு நிறுவனங்களுக்கு அவர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஜியோ பிளாட்பாரம் இயக்குனராகவும் இயங்கி வருகிறார்.
தற்போது கூடுதல் பொறுப்பாக இந்த இரண்டு நிறுவனங்களையும் கவனிக்க உள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் இந்த நியூ எனர்ஜி தொழில் சுமார் 75,000 கோடி ரூபாயை முதலீடு செய்யும். இதனை முகேஷ் அம்பானி உறுதி செய்துள்ளார். அது சார்ந்த உற்பத்தி பணிகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளதாக கூறியுள்ளது.