Categories
உலக செய்திகள்

பாரீஸ் நகரமே பற்றி எரியும் அவலம்.. ஜனாதிபதியின் புதிய விதிக்கு எதிர்ப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் புதிதாக கொரோனா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், மருத்துவமனை பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும். உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்திய பாஸ்போர்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது ஜனாதிபதி, கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டு மக்களைப் பிரிப்பதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட்கள் பயன்படுத்தப்படாது என்று உறுதி கூறியிருந்தார். எனினும் ஜூலை மாதத்தில் விருந்தோம்பல், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி சான்றிதழ் அல்லது பிசிஆர் பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் மாதம், உணவகங்கள், மதுபான விடுதிகள், முதியோர் இல்லங்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் என்று அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் அல்லது பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவித்தார்.

மேலும் செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து மருத்துவமனை பணியாளர்கள், முதியோர் இல்லத்தின் பணியாளர்களும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும். செலுத்தாதவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் மருத்துவமனை பணியாளர்கள், உணவக உரிமையாளர்கள் பேரணி நடத்தினார்கள். அவர்கள் பேரணியில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

எனவே அவர்கள் தங்களது கால்களால் கண்ணீர் புகை குண்டுகளை உதைத்தெரிந்து காவல்துறையினர் மீது தள்ளி விட்டார்கள். எனவே அந்த இடம் முழுக்க போர்க்களமானது. இதில் வாகனங்களுக்கு தீ வைத்து பாரிஸ் நகரமே பற்றி எரிந்து வருகிறது.

Categories

Tech |