அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அளவுக்கு அதிகமான போதைப்பொருட்களை எடுத்துக் கொண்டு சுமார் 93,000 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2019ஆம் ஆண்டு அளவுக்கதிகமான போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு சுமார் 72,000 பேர் உயிரிழந்துள்ளார்கள். இது கடந்த 2020ஆம் ஆண்டு 29 சதவீதம் அதிகரித்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 93,000 உயர்ந்துள்ளது.
இவ்வாறு போதைக்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற வைப்பதை கொரோனா குறித்த ஊரடங்குகளும், கட்டுப்பாடுகளும் கடினமாக்கி விட்டதாக பல வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் “இது மனித உயிர்களின் அதிர்ச்சியூட்டும் இழப்பு” என்று போதை பொருள்களை பயன்படுத்துபவர் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் பிரவீன் பல்கலைக்கழக பொது சுகாதார ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.