ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 2 லாரியை வெவ்வேறு இடங்களில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனை தடுக்க அச்சுந்தன்வயல் சோதனை சாவடியில் ராமநாதபுரம் நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த லாரியை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசாரை கண்டதும் லாரியில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது உறுதியான நிலையில் லாரியை பறிமுதல் செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் பழங்குளம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த பட்டினம்காத்தான் சண்முகம்(61) மற்றும் சொர்ணமூர்த்தி(31)ஆகியோரை கைது செய்து மணல் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.