Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டியில் சென்ற பெண்…. வாலிபரின் அத்துமீறிய செயல்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் 30 வயதான பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் கணவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண் ஸ்கூட்டியில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற வாலிபர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அதன்பின் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை ஒரு கையால் ஓட்டிக் கொண்டும், மற்றொரு கையால் அந்தப் பெண்ணை தொட்டும் தொடர்ந்து ரகளை செய்துள்ளார். இதனால் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அந்த பெண் வாலிபரிடம் சண்டை போட்டதால் அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |