சுவிட்சர்லாந்திலுள்ள கொட்டகை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100 பன்றிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள Wolhusen என்னும் பகுதியில் அமைந்துள்ள கொட்டகையில் பன்றிகளும், மாடுகளும் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுமார் 130 தீயணைப்பு வீரர்களும், மீட்புக்குழுவினர்களும் தீ சுற்று வட்டாரத்திற்கு பரவாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், விலங்குகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் தீயை அணைப்பதற்கு போராடியுள்ளார்கள்.
இதன் விளைவாக 75 பசுக்களையும், சில பன்றிகளையும் கொட்டகையில் எரிந்த தீயிலிருந்து காப்பாற்றியுள்ளார்கள். ஆனால் சுமார் 100 பன்றிகளும், 3 கன்று குட்டிகளும் கொட்டகையில் ஏற்பட்ட தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.