Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மதுபாட்டில போதை மருந்து ….. கிடைத்த ரகசிய தகவல் …. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை ….!!!

மதுபாட்டிலில் போதை மாத்திரைகளை கலந்து விற்று வந்த  2 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மதுபாட்டில்களில் போதை மருந்து கலந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உட்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்டிக்கர்கள் இல்லாத  மதுபாட்டில்களில் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இந்த போதை மாத்திரை கலந்த மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த வெங்கடேசன் ,அருள் ஜோதி ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |