Categories
உலக செய்திகள்

ஜூலை 17-ஆம் தேதிக்கு பிறகு நாங்கள் பொறுப்பல்ல..! அந்த நாட்டை விட்டு வெளியேறுங்க… பிரான்ஸ் தூதரகம் பரபரப்பு அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் தன் நாட்டு மக்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதும் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலீபான்கள் ஆக்கிரமித்து விட்டனர். எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது குடிமக்களை தற்போது வெளியேற்றி வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் நாடு தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது குடிமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ் அரசு வருகின்ற 17-ம் தேதி பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக சிறப்பு விமானம் ஒன்றை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அந்த விமானத்தில் கட்டணம் இலவசம், அனைத்து பிரான்ஸ் நாட்டவர்களும் காபூலிலிருந்து புறப்படும் அந்த விமானத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் ஜூலை 17-ஆம் தேதிக்கு பிறகும் யாரேனும் வசித்தால் அவர்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளது.

Categories

Tech |