திருமணமாகிய ஒருவர் 17 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வினோபா பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனை அடுத்து இம்மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று செல்வகுமாரிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமி மற்றும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் எச்சரிக்கை செய்துள்ளார்.