ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கார்த்திக் சுப்புராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் ஜிகிர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார் . கடைசியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிக்கருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் சியான்60 படத்தை இயக்கி வருகிறார் .
இந்நிலையில் பிரபல இயக்குனர் ஷங்கருடன் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அதாவது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகிவரும் தெலுங்கு படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதியுள்ளாராம். மற்றொறு இயக்குனரின் கதையை ஷங்கர் படமாக்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது . இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .