தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொங்கு கொங்கு நாடு கோரிக்கையை பாஜகவினர் சிலர் முன்னெடுக்கும் நிலையில், தமிழ்நாடு வரைபடத்தில் குளிக்க முயற்சி முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல் சூளுரைத்துள்ளார். கண்ணதாசன், கருணாநிதி, இளங்கோவன் எழுதிய வரிகளைப் புரிந்து கொண்ட தமிழ்நாட்டில் என் வசனம் புரியாதா? என்று தெரிவித்துள்ளார்.