ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகள் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி . இவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதன்பின் இவர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . இதையடுத்து நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு ரூபிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது மகளுடன் இணைந்து போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீதேவி மற்றும் அவரது மகள் ரூபிகா இருவரும் ஒரே டிசைனில் உடையணிந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.