நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர அறிவித்துள்ளார்.
இதற்கு அரசியல் கட்சியினர் ஒருசிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு அவசியம் தேவை. மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக ஆக முடியும் என்று தெரிவித்துள்ளார்.