Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 கிலோ …. போலீசார் அதிரடி சோதனை …. பெண்கள் உட்பட 3 பேர் கைது ….!!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட  3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் டவுன் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு  பவன்குமார்ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி திருவண்ணாமலை டவுன் போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் டவுன் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் .

அப்போது சமுத்திரம் காலனியை சேர்ந்த கவிதா,  நளினி என்ற 2 பெண்கள் மற்றும் அண்ணா நகரை சேர்ந்த தமிழரசன் உட்பட 3 பேரும் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர் .மேலும் அவர்களிடமிருந்த சுமார் 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |