வனப் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் வனப் பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் வனப் பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது 30 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். அதன் பின் யாரோ அவரை எரித்து கொண்டு வந்து வனப்பகுதியில் வீசி சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் அந்தப் பெண் யார், எந்த ஊரில் வசிப்பவர் எனவும், அப்பகுதியில் யாரேனும் காணாமல் போய் இருக்கிறார்களா இல்லை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளரா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை கண்டறிவதற்காக இதுபற்றி துப்பு துலக்கி வருகின்றனர்.