Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்த…. இனி ரொம்ப தூரம் அலைய வேண்டாம்…. பக்கத்திலேயே வேலை முடிக்கலாம்…!!!

வருமான வரி செலுத்துபவர்கள் இனி வருமான வரி தாக்கல் செய்ய நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை . உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலக பொது சேவை மையத்திலேயே வருமான வரி தாக்கல் செய்து விடலாம். இதுகுறித்து இந்திய தபால் துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இனி நீண்ட தூரம் அலைய தேவையில்லை. பக்கத்தில் உள்ள தபால் அலுவலகத்திலேயே வருமான வரி தாக்கல் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தபால் சேவைகள், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் சேவைகள், அரசு திட்டங்கள், பயன்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள வருமான வரி செலுத்துவோர் அனைவருமே தபால் அலுவலகத்திலேயேதி இந்த சேவை பெற முடியும் சமீபத்தில் வருமானவரித் துறையின் www.incometax.gov.in என்ற புதிய இணையதளம்வரி செலுத்துவோருக்கு சேவைகளை எளிமையாக்க அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |