நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று இன்று பள்ளிகள் திறக்கப்படாது என்றும், கொரோனா குறைந்து ஏதுவான சூழல் வந்த பிறகே திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.