Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் அப்டேட் செய்ய எவ்வளவு கொடுக்க வேண்டும்…? இதுதான் கட்டணம்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

ஆதார் தொடர்பான திருத்தங்களுக்கு நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனித அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அவசியம். ஆதார் நம்பரை, செல்போன் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் திருத்தம் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. சில இடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

உண்மையில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை ஆதார அமைப்பு நிர்ணயம் செய்துள்ளது. எனவே ஆதார் அப்டேட் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். தற்போது ஆதார் சேவை தொடர்பான அனைத்து முறைகளும் ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாங்களாகவே ஆன்லைன் மூலமாகவே, ஆதார் தொடர்பான அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்கின்றனர்.

மொபைல் நம்பர் மாற்றுவது, புகைப்படம், முகவரி போன்றவற்றை நாம் ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாக செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். அதற்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பயோமெட்ரிக் தொடர்பான முறைகளுக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வசூல் செய்தால் சட்டப்படி குற்றம்.மற்ற அப்டேட்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஆதார் டவுன்லோட் மற்றும் கலர் பிரின்ட் எடுப்பதற்கு 30 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். இதைத்தாண்டி கட்டணம் வசூல் செய்தால் நீங்கள் 1947 என்ற toll-free எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று ஆதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |