Categories
ஆன்மிகம் இந்து

குல தெய்வம் எது என்று தெரியவில்லையா…? கவலை வேண்டாம்… இந்தக் கோயிலில் வழிபாடு செய்யுங்க…!!!

குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை தலைமுறை தலைமுறையாய் தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம். குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற்றாலும், முதலில் குலதெய்வ வழிபாடு செய்த பிறகுதான், நிகழ்ச்சி தொடங்கும். குலதெய்வம் என்பது தாய் தந்தைக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடத்தும் ஒரு அற்புத சக்தியாக பார்க்கப்படுகின்றது. சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள். ஆனால் மற்ற சிலரோ குலதெய்வத்தை முன்னிறுத்தி அனைத்தையும் செய்வார்கள். அதேபோல் சிலருக்கு குலதெய்வம் எது என்பதே தெரியாமல் இருக்கும்.

இதனால் குடும்பத்தில் கவலைகள், தீராத நோய்கள், கடன்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் மனம் உடைந்து போவார்கள். இப்படி குலதெய்வம் பற்றி தெரியாமல் இருப்பவர்கள் வழிபட அகத்திய மாமுனிவர் வழிபாடு செய்த வனதுர்க்கை அம்மனை வழிபடலாம். கும்பகோணம் அருகே உள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வனதுர்க்கை கோயில் கோவில் உள்ளது. சூரியனின் கதிர்கள் துர்க்கை அம்மன் மீது படுவதால் இந்த துர்க்கையை ஆகாச துர்க்கை என்று அழைக்கின்றனர். இந்த கோயிலில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. எலுமிச்சம்பழம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் குல தெய்வத்தின் சக்தி நமக்கு கிடைக்கும். குலதெய்வத்தின் அனுகிரகம் கிடைத்து வீட்டில் உள்ள பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

Categories

Tech |