தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டத்தின்படி மொபைலில் போன் செய்தால் மட்டும் போதும் உங்களுக்கு பணம் வீடு தேடி வரும். அந்த சேவையை நீங்கள் பெற 18001037188 அல்லது 18001213721 ஆகிய இலவச அழைப்புக்கள் போன் செய்தால் மட்டும் போதும். இதனை தவிர www.psbdsb.in என்ற இணையத்தளத்தில் நீங்கள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த புதிய திட்டம் வங்கி வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.