நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய கட்டணங்களை 15 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இவ்விரு நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதைப்போல சென்னை, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் கார் ஓட்டுனர்களும் கட்டணத்தை உயர்த்தி கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். எனவே ஓட்டுநர்களின் சுமையை குறைக்கும் விதமாக ஊபர், ஓலா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.