வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளியான வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஜோதி நகர் பகுதியில் சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாய் கட்டுவதற்கு அதற்கான வேலைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்தத் தொழிலில் முத்துகிருஷ்ணபேரி பகுதியில் வசிக்கும் சத்திவேல் என்பவரும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சக்திவேல் அந்த வீட்டில் இருந்த காங்கிரீட்டினால் செய்யப்பட்ட சிலாப் உடைத்து கொண்டிருந்தார்.
அப்போது சக்தி வேலின் மீது திடீரென அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.