Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணத்திற்கு சென்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நயினார்புரம் பகுதியில் பொன் முத்தையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய் பேச முடியாத கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று உள்ளார். அப்போது பாலமுருகன் மது குடித்து இருந்ததால் போதையில் தெரியாமல்  திடீரென ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளார்.

இதனையடுத்து அவ்வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென பாலமுருகனின் மீது மோதியதால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |