நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் உள்ள மேற்கு வலசு கிராமத்தில் பழனிச்சாமி(32) என்பவர் கூலித்தொழில் செய்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிச்சாமி நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியாக வந்த வாகனம் பழனிச்சாமி மீது மோதி நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த விபத்தில் பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் காவல்துறையினர் பழனிச்சாமியின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பழனிச்சாமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கூலித்தொழிலாளி மீது இடித்துவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்ற கார் டிரைவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.