கியூபா நாட்டில் உணவு மற்றும் மருத்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை ரத்து செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கியூபா நாட்டில் உணவு , மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அந்நாட்டு அரசு சுங்க வரி விதித்திருந்தது. இந்த கொரோனா தொற்றுப்பரவலுக்கு மத்தியில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்ததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இதனால் அந்நாட்டு மக்கள் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர் .மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதிகளில் இறங்கி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் உணவு மற்றும் மருந்து பொருட்கள் மீதான சுங்க வரிகளை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கியூபா நாட்டிற்கு வரும் பயணிகள் இந்த ஆண்டு இறுதிவரை வரம்பின்றி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.