சாலை காண்டிராக்ட்ரை கட்டையால் தாக்கியதால் அவர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமரபுரம் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சாலை காண்டிராக்டரான ஸ்ரீதர் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ஸ்ரீதர் அம்பேத்கார் பகுதியில் சாலை போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருப்பதை அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவர் அங்கு சென்று ஸ்ரீதரை தகாத வார்த்தைகளால் பேசி திடீரென அங்குள்ள கட்டையை எடுத்து அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதில் ஸ்ரீதர் பலத்த காயமடைந்து மயக்கி கீழ விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஸ்ரீதருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்ரீதரின் தந்தையான ராமமூர்த்தி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீதரை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற மகேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.