பாசிப்பருப்பு கடையல்
தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு – 1 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் , மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், பாசிப்பருப்பு கடையல் ரெடி!!!