அப்ரிலியா மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக 150சிசி மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி மோட்டார் சைக்கிள் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் போது விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் அப்ரிலியாவின் 150சிசி மோட்டார் சைக்கிள் மாடலுக்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஆர்.எஸ். 150 அல்லது டியூனோ 150 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அப்ரிலியா நிறுவனம் இரண்டு மாடல்களை ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் அதிக அம்சங்கள் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அப்ரிலியா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் குறைவான அம்சங்கள் கொண்டே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் டியூனோ 150 மாடல்கள் 149சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜினுடன் 17.7 பி.ஹெச்.பி. பவர் 14 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேக்கிங்கிற்கு முன்புறம் மற்றும் பின்புறத்தில் 300 எம்.எம். மற்றும் 218 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், அப்ரிலியாவின் மூன்று ஹெட்லேம்ப் வடிவமைப்பு, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இந்த 150சிசி மோட்டார் சைக்ளின் விற்பனையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.