கர்நாடக மாநிலத்தில் பெற்ற மகள்களை கொன்று விட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவி அருகே உள்ள சுங்கச்சாவடி கிராமத்தை சேர்ந்த அனில் என்பவரின் மனைவி ஜெயா. இவர்களுக்கு அஞ்சலி அனன்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. கொரோனா காரணமாக வேலையை இழந்த அனில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன் மாந்திரீக பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அதனை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்திற்கு பிறகு அனிலுக்கு சற்று மன நலம் சரியில்லாமல் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், அவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்தது மட்டுமல்லாமல், தனது கையை அறுத்துக்கொண்டு விஷம் கலந்த உணவை அனிலும் சாப்பிட்டீங்களார். சிறிது நேரம் கழித்து ஜெயா வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர்கள் மூவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.