சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 சிறுவர்களைக் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு 5 வயதில் மகள் இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மூன்று சிறுவர்கள் 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 3 சிறுவர்களை கைதுசெய்துள்ளனர்.