Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பணம் தரல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினர்க்கு காத்திருந்த அதிர்ச்சி

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர்- சுமதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜய் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் விஜய்க்கு மதுப்பழக்கமும் இருந்துள்ளது. இதனையடுத்து விஜய் தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் பணம் தர மறுத்ததால் விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் மனமுடைந்த விஜய் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜய்யின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |