நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கணேசன்- பாப்பாத்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்களும் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இளைய மகனான ராமேஷ் ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் வேலையை முடித்துவிட்டு வண்ணான் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அதன்பின் நீண்ட நேரமாகியும் ரமேஷ் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் ரமேஷ் கிடைக்கவில்லை.
இதனையடுத்து வண்ணான் ஏரியின் பக்கத்தில் ரமேஷின் உடைகள் மற்றும் காலனி இருப்பதை ஸ்வீட் கடை உரிமையாளரான கருப்பையா பார்த்துள்ளார். அதன் பின் ரமேஷ் நீரில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகித்த கருப்பையா தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக தேடியும் ரமேஷை மீட்க முடியவில்லை. இந்நிலையில் ஏரியில் ரமேஷின் உடல் மிதந்துள்ளதை தீயணைப்பு வீரர்கள் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் ரமேஷின் உடலை மீட்டு ஆம்புலன்சில் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.