Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அதிபருடன் சந்திப்பு.. வெளிவிவகார மந்திரி வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தான் அதிபருடன் அந்நாட்டின் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், உஸ்பெகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது தாஷ்கண்ட் என்ற நகரத்தில் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனியுடன் சந்திப்பு மேற்கொண்டார். நாட்டில் கடந்த 20 வருடங்களாக அரசபடையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

எனவே அமெரிக்கா, தங்கள் படைகளை ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் அங்கு களமிறக்கியது. ஆனால் தற்போது அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து  வெளியேறி விட்டது. எனவே அந்நாட்டில் மூன்றில் ஒரு பகுதியை தலீபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபரை சந்தித்தது  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்து, மத்திய மந்திரி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, நாடு மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள நிலை தொடர்பில் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி, வளர்ச்சி, மற்றும் நிலைப்புத்தன்மை போன்றவற்றில் நமது  ஆதரவு இந்த சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்றார்.

Categories

Tech |