தண்ணிரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நக்கசேலம் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் அகிலன் தனது தோழர்களான முத்துமணி, மோகன் மாரிமுத்து ஆகியோருடன் அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அகிலன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணிரில் மூழ்கிய அகிலனை சடலமாக மீட்டனர். இதனையடுத்து அகிலனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.