சாலையை கடக்க முயன்ற பெண் மீது ஆம்னி பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மா காந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து ரயிலின் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக மறைமலைநகர் நகராட்சி மைதானம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் பத்மா மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.