லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
#Arambichitom@ikamalhaasan @Dir_Lokesh @VijaySethuOffl @girishganges pic.twitter.com/HYaIwcHV6a
— Raaj Kamal Films International (@RKFI) July 16, 2021
இந்நிலையில் இன்று விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது . மேலும் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் படக்குழுவினர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.