நாடு முழுவதும் கொரோனா பரவல் குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு நடத்துவது தொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடலாம். எனவே நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்தும் முடிவை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் பிரதமரிடம் அறிவுறுத்தியுள்ளார்.