Categories
உலக செய்திகள்

”அதிபரை குறிவைத்து தாக்குதல்” 24 பேர் உடல் சிதறி பலி…!!

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப்கானியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உடல் சிதறி பலியாகினர்

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வருகின்ற 28_ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பர்வான் மாகாணத்தில் உள்ள சரிகார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கனி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசத் தொடங்கியபோது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

மேலும் இந்த தாக்குதலில் 30_க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தலைநகர் காபூலில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு வெடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Categories

Tech |