Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த சான்றிதழ் ரொம்ப அவசியம்…. நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்…. கலெக்டரின் அறிவுரை….!!

புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியின மலையாளி சாதிச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியினர் மலையாளி சாதி சான்றிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில், மண்டல துணை தாசில்தார் ரேவதி வரவேற்று பேசினார். இதில் கலெக்டர் அமர் குஷ்வாஹா, சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க. தேவராஜ் போன்றோர் பங்கேற்று சாதி சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் கூறியபோது, 4 வருடங்களுக்கும் மேல் புதூர் நாடு, நெல்லி வாசல் நாடு, புங்கம்பட்டி நாடு மக்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனை மீது தனிகவனம் செலுத்தி முடிவு காண அறிவுறுத்தியதன்படி சப்-கலெக்டர் விரைவாக செயல்பட்டு 500-க்கும் மேற்பட்ட மனுதாரரிடம் நேரடியாக விசாரணை செய்து, அவற்றில் 333 பேர்கள் தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக 230 நபர்களுக்கு மலையாளி ஜாதி சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்று கலெக்டர் தெரிவித்தார். இதனையடுத்து நிலுவையில் இருக்கின்ற மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த பழங்குடியின சாதிச்சான்றிதழ் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. எனவே மலைவாழ் மக்களின் பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பு, சுயதொழில் கடன் உதவிகள் பெறுவதற்கு இந்த சான்று மிகவும் அவசியமானதாக இருக்கின்றது.

அதன்பின் அரசின் இட ஒதுக்கீடுகளை பெற்று தங்களின் அடுத்த தலைமுறை முன்னேற்றமடைய சான்றிதல் அவசியமாக இருப்பதனால் அனைத்தையும் கருத்தில் கொண்டு உடனடி விசாரணை செய்து வழங்கப்பட்டிருப்பதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்சாரம், வேலைவாய்ப்பு, கடனுதவிகள் போன்ற தேவையான பிரச்சனைகள் இருந்தால் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் மலைவாழ் மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் அத்தீப், மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டு, இறுதியில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |