கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி இன்று மாலை சந்நிதானம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 21ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி தினமும் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன், ஆர்டிபிசிஆர் கோவிட் தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.