ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கமானது அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கமானது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் நேற்று முன்தினம் 43000 த்திற்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் 40 லட்சத்தை தாண்டியும் பலியானோர் எண்ணிக்கையானது 81,084 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கத்தில் அவசர கால விதிகளின் படி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியேவர வேண்டும் என கூறப்பட்டது. மேலும் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்றவைகள் மூடப்பட்டன. இதனை அடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும் ஜூன் 2020 வரை ஊரடங்கானது அமலில் இருந்துள்ளது. இந்த பொது முடக்கமானது அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று ஸ்பெயின் நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.