குடும்ப அட்டையை பெற வேண்டும் என்றால் முன்பெல்லாம் அதற்கான அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது, இதனை ஆன்லைனில் எளிதாக பெறும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. குடும்ப அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி மற்றும் அதில் உள்ள தகவல்களை புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
தமிழக உணவு பொருள் வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, பயனாளர் நுழைவு என்ற டேப்பை கிளிக் செய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால், குடும்ப அட்டையை பதிவிறக்கம் செய்யும் டேப்பை காண முடியும். இதன் உள்ளே சென்று smart card print என்ற ஆப்சனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.