Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அங்கு மதுபான கடை திறக்க கூடாது…. பொதுமக்களின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

மதுபான கடை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கசம் பகுதியில் அமைந்திருக்கும் மதுபான கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவற்றில் ஓட்டை போட்டு 2 முறை திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த மதுபான கடையை அங்கிருந்து அதே பகுதியில் உள்ள வேறு ஒரு கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மதுக்கடை அமைய இருக்கும் கட்டிடம், குடியிருப்பு பகுதி உள்ள இடமாக இருப்பதனால் அங்கு திறக்கக்கூடாது என்று கூறி  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி, காட்பாடி தாசில்தார் பாலமுருகன், மதுபான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது பழைய இடத்திலேயே மதுபானக்கடை செயல்படும் என்று அதிகாரிகள் கூறிய பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |