கடந்தாண்டில் சுமார் 1.7 கோடி குழந்தைகள் டெட்டனஸ், தட்டம்மை டிப்தீரியா போன்ற வழக்கமான தடுப்பூசிகளை கூட போட்டுக்கொள்ள வில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தென்கிழக்காசியா மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் குழந்தைகளுக்கென வழக்கமாக போடும் தடுப்பூசிகளின் ( தட்டம்மை டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் ) பணி மிகவும் மோசமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 37 லட்சத்துக்கும் அதிகமான அதாவது 2.30 கோடி குழந்தைகள் வழக்கமான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 1.7 கோடி குழந்தைகள் எந்த விதமான தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ளவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அமைப்பு சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவின் பேரழிவு இருக்கும் சமயத்தில் இவ்வாறு குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாததால் ஏற்படும் நோய் தாக்குதல் மென்மேலும் பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை ஒன்றை உலக சுகாதார இயக்குனர் விடுத்துள்ளார்.