ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் துருக்கியின் கொன்யா பகுதியில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான டஸ் ஏரியில் ஏராளமான வலசைப்பறவைகள் அடிக்கடி வந்து செல்லும். இந்த ஏரியில் இரண்டு வார காலமாக பிளமிங்கோ பறவைகள் அதிகமாக உயிரிழந்து கிடப்பதாக கூறப்படுகிறது. அதிலும் சிலர் தங்கள் பகுதி பாசனத்திற்காக டஸ் ஏரிக்கு நீர் வரக்கூடிய பகுதிகளை தடுத்து தண்ணீரை திருப்பிக் கொண்டதால் அந்த ஏரியானது வறண்டு காணப்படுவதாக சூழலியலாளர்கள் கூறியுள்ளனர்.
Selcuk பல்கலைக்கழகத்தில் உயிரியல் ஆய்வாளர்கள் அந்த ஏரியின் உவர்த்தன்மை அதிகரித்து அங்கு பிளமிங்கோ பறவைகள் பறக்க முடியாமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பிளமிங்கோ பறவைகள் பாசனத்திற்காக தண்ணீர் கொள்கையை தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வதால் பரிதாபமாக உயிரிழக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் வசதிக்கு ஏற்றபடி இயற்கையை மனிதர்கள் வளைப்பதன் விபரீதம் தான் மனித குலத்திற்கான அபாயமாக கூறப்படுகிறது.