Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு மதிப்பெண் விலை 50 சதவீதம்,11 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 சதவீதம், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30% மதிப்பெண்களின் சராசரி கொண்டு கணக்கிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் கொரோனா 9 உள்ளிட்ட காரணங்களால் செய்முறை தேர்வில் பங்கேற்று மாணவர்களுக்கு பிளஸ் 1 செய்முறை தேர்வு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |