அமெரிக்காவில் மின்னலினால் ஏற்பட்ட தீப்பொறி காய்ந்த புற்களின் மீது பட்டதால் உருவான காட்டு தீயை அணைப்பதற்கு சுமார் 1700 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
அமெரிக்காவில் ஒரேகான் என்னும் மகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்னலின் காரணத்தால் காய்ந்த புற்களின் மீது தீப்பொறி ஏற்பட்டு அதன்மூலம் காடு முழுவதும் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 1,700 தீயணைப்பு வீரர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.
மேலும் 12 ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் தண்ணீரை பீய்ச்சியடித்து காட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயன்று வருகிறார்கள். இதற்கிடையே இந்த காட்டுத்தீயினால் சுமார் 2,27,000 ஏக்கர் நிலப்பரப்புகள் தீயில் நாசமாகியுள்ளது. இதனையடுத்து இந்த காட்டுத் தீயினால் சுமார் 2000 வீடுகள் தீயில் நாசமாகும் ஆபத்து உருவாகியுள்ளது.