மஹேந்திரா நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு உட்படும் புதிய காரின் சோதனை புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
2020 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகள் அமலாக உள்ளது. இதனால் அனைத்து மோட்டார் நிறுவனங்களும் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் கார் மற்றும் பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் புதிய காரை உருவாக்கி உள்ளது. இந்த கார் ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலின் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பி.எஸ். 6 மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும், இந்த அல்டுராஸ் ஜி4 மாடலின் பின்புறத்தில் காரிலிருந்து வெளிவரும் புகையை கண்கானிக்கும் வகையில் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மஹிந்திரா காரின் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 181 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 420 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. இந்த புதிய என்ஜினுடன் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் இதன் விலை அல்டுராஸ் ஜி4 பி.எஸ். 6 மாடலின் விலையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 27.70 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், புதிய மாடலின் விலை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சம் வரை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது..