ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சவுகத் அலி தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம்(59) மற்றும் அவரது மகன்(30) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பான் மசாலா, பாக்கு, புகையிலை உட்பட 32 கிலோ தடைசெய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.